Dr P Venkatachalam
Writer, Educationist, Agricultural Engineer and Energy Auditor
Retired Professor from Tamil Nadu Agricultural University, Coimbatore Currently : Visiting Faculty, Nandha Engineering College, ErodeVisit my Podcast
வேளாண் கல்லூரிகள் ஒரு அறிமுகம் | Agricultural Colleges in Tamil Nadu
Kitchen Garden Interview from Pasumai Vikatan
Personal Details
- PHONE : +91 94429 61793
- EMAIL : [email protected]
- Postal Address
-
Santhi Illam, 102/96A,KP Subramanian Street,
Thingalur Road, Kolathanvalasu,
Perundurai TK India Erode 638116
About Me / நான், ப.வெங்கடாசலம்
நான் 1955 ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி என்ற குக்கிராமத்தில், பழனியப்பன் வீரம்மாள்ஆகியோருக்கு, இரண்டாவது மகனாகப் பிறந்தேன். நடுத்தர விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் பெற்றோர்கள் மிக குறைந்த தோட்டக்கால் நிலைத்தைக் கொண்டு தனது மூன்று மகன்களையும், தொழிலில் கல்லூரிகளில் படிக்கவைக்க பெரும் சிரமங்களை எதிர்கொண்டானர். ஆடு வளர்ப்பே எங்களைப் படிக்கவைக்க உதவியதாக அப்ப அடிக்கடி கூறுவதுண்டு. நாங்கள் படிக்கும் போதே அனைத்து வேளாண் பணிகளையும் செய்து கொண்டிருந்தோம். அப்பாவின் கடின ஊழைப்பு, மனிதாபிமானம், மற்றவர்களுக்கு உதவும் பன்பு, பணியில் அற்பணிப்பு போன்றன எங்களையும் ஆக்கிறமித்திருந்தது. பிற்காலங்களில் நான் சமூக உணர்வுடன் பல போராட்டங்களை வழி நடத்தியதற்கு இவையும் ஒரு காரணமாகும். தினம் பத்துக் கிலோமீட்டர்கள் சென்று எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். எனது புகுமுக வகுப்பை ஈரோட்டில் உள்ள சிக்கையநாய்க்கர் கல்லூரியில் முடித்துவிட்டு, தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியில் வேளாண் பொறியியல் பாடத்தில் சேர்ந்தேன்.
முதலில் கோவை அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். வேளாண் பொறியியல் புதிதாக தொடங்கப்பட்டது என்பதாலும், எனக்கு நன்கு பரிச்சியமான தொழில் என்பதனாலும் இந்தப் பாடத்தை தேர்வுசெய்தேன்.அப்போது, ஏன் இப்போதும் வேளாண்மைக் ஒரு சவாலாக இருப்பவை வேளாண் இயந்திரமயமாக்கள் மற்றும் நில நீர் மேலான்மை ஆகும். அவற்றில் வேளாண் இயந்திரமயமாக்களில் எனது முதுகலை பட்டத்தை முடித்தேன்.அப்போது நிலவிய ஆற்றல் பற்றாக்குறையின் அவசியத்தை உணர்ந்து மாற்று ஆற்றலுக்கான தேடல் இருந்ததால், எனது ஆய்வுக்கான தலைப்பை காற்று ஆற்றல் அறுவடையில் தேர்வுசெய்தேன். எனது இந்த ஆய்வு தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவில் கற்று ஆற்றல் வளம் குறித்த ஆய்வை தொடங்கிய முதல் ஆய்வாகும். தமிழகத்தின் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த மாதங்களில், எந்த அளவில் காற்று ஆற்றல் கிடைக்கிறது என்பதை எனது ஆய்வில் கண்டறிந்தேன். பின்னாட்களில் தமிழகத்தில் காற்று ஆற்றலைப்பயன்படுத்தும் திட்டம்வர எனது ஆய்வு முக்கியப்பங்கு ஆற்றியது. எனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை மற்றோர் வற்றாத ஆற்றலான சாண எரிவாயு எனப்படும் கரிம எரிவாயு உற்பத்தியில் மேற்கொண்டேன். அப்போது நான் கால்நடைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வந்ததும் இதற்கு ஒரு காரணமாகும். எனது இளங்கலைப்பட்டத்தை முடித்ததும் 1979 பிப்ரவரி மாதம் இணை ஆராச்சியாளனாக வேளாண் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தேன். எனது இளங்கலைப்பட்டத்தில் வேளாண் கழிவுகளில் இருந்து காகித அட்டைகள் செய்யும் ஆய்வுத்திட்டத்தை செய்ததால், எனது முதல் பணியாக வேளாண் கழிவுகளில் இருந்து கோப்புகள் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. அதை வெற்றிகரமாக செய்து முடித்தேன் .பல்கலைக் கழகத்திற்கு தேவைப்படும் அனைத்து கோப்புகளையும் வாழைக் கழிவு மற்றும் காகிதக் கழிவு கொண்டு செய்து கொடுக்கப்பட்டது. இதற்கிடையே தற்காலிகப் பணியில் இருந்த இணை ஆராச்சசியாளர்களை நிரந்தரப் பணியாக்க வேண்டும் என்ற போராட்டத்தை, நாங்கள் சங்கம் அமைத்துப் போராட தொடங்கி இருந்தோம். இணை ஆராச்சியாளர்கள் சங்கத்தில் நானும் எனது நண்பர்களும் முக்கியப் பங்காற்றினோம், அதன் காரணமாக நான் பாண்டிச்சேரியில் இருந்த வேளாண் அறிவியல் நிலையத்திற்கு மாற்றப் பட்டேன். அகில இந்தி அளவில் தொடங்கப்பட்ட முதல் அறிவியல் நிலையம் என்பதால் பல உள்கட்டுமானங்களை ஏற்படுத்தும் பணியை செய்யும் பணி எனக்கு கொடுக்கப்பட்டது. முதன்மைக் கட்டிடம் உட்பட அனைத்து கட்டுமானங்களும் எனது காலத்தில் கட்டப்பட்டன.
மீண்டும் எனது முதுகலைப்பட்டத்திற்காக கோவைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டேன்.இந்தக் காலத்தில் தான் நான் காற்று ஆற்றலின் வளம் மற்றும் அதன் சாத்தியக் கூறு குறித்த ஆய்விகளை மேற்கொண்டேன். மேலும் இத்தக்காலத்தை, கல்வி பற்றிய புதிய அறிதல் பெற்ற காலம் என்று கூறலாம். கல்வியை வேலைக்கான அடையாளச் சீட்டாக எண்ணியிருந்தேன், இல்லை அது சமூக மாற்றத்திற்கான ஒன்று என அறிந்தேன். அன்று அரசு பணிக்கான ஆட்களை உற்பத்தி செய்யும் பணிய கல்லூரிகளுக்கு இருந்தது. இன்று தொழில் கல்வி என்ற பெயரில் பில்கேட் போன்றவர்களுக்கான வேலையாட்களை உற்பத்தி செய்யும் பணியாக மாறியுள்ளது. ஒவ்வொரு கல்வியாளரும் அரசியல்வாதியாகவும், கலைஞராகவும் இருக்கவேண்டும் என உணர்ந்தேன். அதையே இறுதிவரை பின்பற்றி வருகின்றேன். அதன் பின் நான் காட்டுப்பாக்கத்தில் கால்நடைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இருந்த வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டேன். இங்குதான், வேளாண் விரிவாக்கம் பற்றியும், உழவர்களின் உண்மையான தேவைகள் குறித்தும் அறிந்துகொள்ள அரிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றேன். மேலும், இங்குதான் கிராமங்களுக்கும் ஆராச்சி நிறுவனங்களுக்கும் தொடர்பினை எற்படுத்தும் திட்டத்தை நடைமுறைப் படுத்தினோம். இங்கு பணியாற்றிய நான்கு ஆண்டுகளில் வேளாண்மையில் கால்நடைகளின் பங்குபற்றி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பின்னர் மீண்டும் கோவைக்கு மாற்றப்பட்டேன்.
இங்கு பணியாற்றிய பதினான்கு ஆண்டுகளே எனது பல்கலைக் கழக வாழ்வில் அதிமுக்கியமான காலமாகும். ஆற்றல் பூங்காவில் தொடங்கி பல்வேறு ஆற்றல் திட்டங்களை நிரைவேற்றினேன்.இங்கு எனது துறையில் அமைந்த குழு கூட்டுப்பணிக்கு சிறந்த உதாரணமாகும். எனது பணி குறிப்பாக வெப்ப எரிவாயு கலன், எரிகரி உற்பத்தி, சூரிய வெப்ப ஆற்றல் கருவிகள் மற்றும் ஆற்றல் தணிக்கை போன்றவற்றில் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் தான்,ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியலில் இளங்கலைப்பட்டம் தொடங்கப்பட்டது. பல ஆய்வுத் திட்டங்களைக் கொண்டுவந்து, அவற்றைச் சிறப்பாக முடித்து, பல தொழில்நுட்பங்களை உழவர்களுக்குக் கொண்டுசென்றது, இந்தக் இக்காலத்தில் தான். இதில் ஆறு ஆண்டுகள் துறையின் தலைவராக இருந்தது எனது ஆய்வுத்திட்டங்களை நிறைவேற்ற உதவியாக இருந்தது.மேலும் இதே காலகட்டத்தில் விடுதிக்காப்பாளனாகவும் இருந்தேன். அந்தப்பணி எனது மனித உறவுகள் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்த பெரிதும் உதவியது என்று கூறலாம். புதிய விடுதிகள் கட்டியது,பழைய விடுதிகளைப் புதுப்பித்தது, ஊழியர்களை நிரந்தரமாக்கியது,மாணவர்களிடையே நாளிதழ்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது, ஆற்றல் சேமிப்போடு வற்றாத ஆற்றலை அறிமுகப்படுத்தியது என பலபணிகள் இன்னும் என்னை அங்கு நினைவுபடுத்திக் கொண்டுள்ளன. பணிக் காலங்களில் எனது மேல் அதிகாரிகளாக வந்த முனைவர் கஜேந்திரன் ,முனைவர் சம்பத்ராஜன் மற்றும் துணைவேந்தராக இருந்த முனைவர் சி. இராமசாமி ஆகியோர் பகுத்தறிவுவாதிகளாக இருந்தது எனக்கு பேருதவியாக இருந்தது.
என் பணியின் இறுதிக்காலங்களில் பல இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது, எனினும் அவற்றை அனுபவங்களாக எடுத்திக்கொண்டேன். பல முறை பணியிடங்கள் மாற்றம், ஆய்வுத்திட்டங்களை மற்றவர்களுக்கு மாற்றியது,முதுகலை மற்றும் முனைவர் பட்டமாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க அனுமதிக்க மறுத்தது, எனது துறையில் பணியாற்றும் வாய்ப்பைப்பறித்தது, போன்ற சில வற்றை குறிப்பிடலாம்.
ஓய்வுக்குப் பின் எனது பணிகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இரண்டு கல்லூரிகளுக்கும், இரண்டு பல்கலைக் கழகங்களுக்கும் ஆலோசகராக இருக்கின்றேன். இவற்றுடன் எப்போதும் போல் படிப்பது, எழுதுவது என்ற என் விருப்பத்தைத் தொடர்கின்றேன். எங்களுக்கான காய்கறி மற்றும் பழங்களை நாங்களே உற்பத்தி செய்துகொள்கின்றோம். பத்திரிக்கைத்துறை,திரைப்படத்துறை மற்றும் சில ஆற்றல் சார்ந்த தொழில்துறை நண்பர்களிடம் எனது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்கின்றேன்.
Born into a modest farming family in the quaint village of Kittampatti, located in the Erode district of Tamil Nadu, I embarked on an academic journey that would shape my career. My educational foundation was laid at Tamil Nadu Agricultural University (TNAU), Coimbatore, where I earned both my undergraduate and postgraduate degrees in Agricultural Engineering.
My foray into academia began at TNAU, where I dedicated myself to advancing knowledge in biomass gasification, culminating in the successful completion of my Ph.D. Over the years, my expertise expanded across diverse domains, including solar energy, biofuels, biochar, nano-carbon tubes, and more, as I actively engaged in numerous research projects and experiments.
Recognized for my administrative prowess, I assumed leadership roles as the head of the Bioenergy department and the Chief Warden at TNAU's main campus. Juggling these responsibilities concurrently, I spearheaded the implementation of various developmental initiatives. Throughout my academic and research tenure spanning 28 years in the public sector, I received numerous awards and accolades in recognition of my contributions to teaching, research, and outreach services.
In pursuit of continuous learning, I acquired certifications as an Energy Manager and Energy Auditor, enabling me to undertake diverse energy consultancy projects. My journey at TNAU concluded in 2015 upon my retirement. Currently, I share my wealth of knowledge as a visiting faculty and advisor to various agricultural institutions and private companies.
Academic Accomplishments @ TNAU
Prof P Venkatachalam has pioneered the creation of innovative degree programs and curricula, including B.Tech. (Energy & Environmental Engineering), B.Farm Tech, PG Diploma in Energy Management, and several other programs for TNAU and various other universities. His impactful contributions extend to serving on TNAU's Academic Council, Board of Studies, and similar roles in other institutions, actively participating in curriculum design. In recognition of his dedication to teaching, he was honored with the Best Teacher Award by TNAU in 2010.
Prof Venkatachalam has played a crucial role as a resource person in developing e-learning materials for B.Tech. (Agrl. Engineering) and B.Sc (Agri) courses. His teaching engagements cover a broad spectrum, encompassing undergraduates, postgraduates, and Ph.D. students in diverse life science domains such as Agricultural Engineering, Food Process Engineering, Energy & Environmental Engineering, Agriculture, Horticulture, and more. With a commitment to mentorship, he has guided postgraduate students in both India and Canada.
Research Accomplishments
In his research endeavors, Prof P Venkatachalam has pioneered various agricultural technologies, introducing innovations such as bioenergy production facilities for biodiesel and gasifiers, solar tunnel dryers to enhance the drying of agro-products, and efficient agro-waste management through briquetting mechanisms. Over the course of his career, he successfully led and completed 20 independently sponsored projects, securing an impressive sum of Rs 270 million (Rs 27 crores) in funding.
His contributions have not gone unnoticed, as evidenced by the recognition bestowed upon him. Prof P Venkatachalam was honored with the Best Researcher Award from TNAU and the prestigious Ramasastrulu Mungala Prize for Best Research in Agriculture from MASU. Additionally, he played a pivotal role in the establishment of the Center of Excellence in Bio Fuels at TNAU, solidifying his position as one of the key architects behind this significant initiative.
Outreach Accomplishments
Prof P Venkatachalam played a pivotal role in conceiving and bringing to fruition the Renewable Energy Park. This innovative initiative garnered attention from a diverse audience, attracting researchers, students, farmers, agri-preneurs, and the general public, including influential agricultural policy makers.
His commitment to knowledge dissemination extended to conducting over a thousand training programs. These programs targeted farmers, biogas users, and civil construction employees involved in the application of biogas technology. During his tenure as an Assistant Professor at KVK (1994 to 1998), he introduced a novel approach to technology transfer through the institution-village linkage program, supported financially by the Indian Agricultural Research Council (ICAR).
In recognition of his outstanding contributions, Prof P Venkatachalam received the Best Extension Worker Award from TNAU in 2006. His dedication to extending knowledge is further evident in his prolific body of work, including the creation of a substantial volume of extension literature. This includes the publication of over 100 popular articles, 50 booklets, and the preparation of 30 news items for widely read Tamil and English newspapers.
Institution Building
Prof P Venkatachalam has championed the introduction of renewable energy technologies within university and college premises, encompassing the generation of biogas-based electricity and the implementation of solar hot water systems. He has played a pivotal role in establishing state-of-the-art laboratories and enhancing infrastructure to support the newly instituted B.Tech core courses.
In his capacity as Chief Warden, Prof P Venkatachalam has spearheaded innovative initiatives in student hostels, revolutionizing processes such as computerizing hostel accounts, modernizing energy-efficient kitchens, implementing a biomedical waste disposal incinerator, and introducing cooking mechanization. Additionally, he has laid the foundation for a Pilot Paper Plant, dedicated to producing paper files from waste materials to fulfill university-wide demands.
With a career spanning nearly three decades, Prof P Venkatachalam has actively engaged in academic, research, outreach, and institution-building endeavors. This includes forging connections with both national and international institutions and securing external funds to create essential resources. His global involvement extends to visits to the U.S.A, Canada, Germany, Israel, the United Kingdom, Singapore, and Malaysia, where he participated in training programs, facilitated mutual exchange of scientific ideas, and undertook various research assignments.
Education
Certified Energy Auditor (CEA)
Bureau of Energy Efficiency, Ministry of Power
2008
Certified Energy Manager (CEM)
Bureau of Energy Efficiency, Ministry of Power
2006
Ph.D in Bioenergy
Tamil Nadu Agricultural University
1999
Master of Engineering
Tamil Nadu Agricultural University
1983
Bachalor of Engineering - Agricultural Engineering
Tamil Nadu Agricultural University
1978